Saturday, July 11, 2009

என்னடா பாண்டி என்ன பண்ண​போற?

நாங்கெல்லாம் சென்னை தொலைக்காட்சில ஞாயித்து கிழமை போடற படத்து பேர கேக்கறதுக்காக, எதிரொலில அந்த அக்கா படிக்கிற அத்தன கடிதங்களயும், அதுக்கு அந்த மாமா சொல்ற பதிலுகளயும் (?) கவனமா, கேவலமா கேட்டுக்கிட்டு ஒக்காந்திருப்போம்.

சில டைம் மாமா படத்து பேரச் சொல்லாமலியே விசுக்குனு எந்திரிச்சு போயிருவாரு.. சின்னப்பசங்க, நாங்கெல்லாம் பயங்கர கடுப்பாயிருவோம். டிவியை அப்படியே எட்டி அப்பலாமான்னு தோணும்.. ம்ம்.. ஓசி டிவி பாக்கறதுக்கு வூட்டுக்குள்ள நம்மள விடறதே சாஸ்தி.. அதில இந்த லொள்ளு வேறயா?

இப்ப பாருங்க... ஒரு நாளைக்கு 8 படம் பாக்கலாம் - கேபிள் டிவில. எதிரொலியாவது எங்கூட்டு எலியாவது..

ம்ம்.. சொல்லியாவுது.

போனவாரந்தான் நம்மூட்டு பெரிய பொட்டிக்கு சின்ன பொட்டி (செட்டாப்) வச்சாங்க.200 சேனல் வருதாம்ல.. எங்வூட்டுக்காரம்மா ஒரு தமிழ் சேனல் உடாது.. வூட்ல நியூஸ் கேக்கிற ஒரே ஆளு அம்மிணிதான்.

நான் ஒருவாட்டி சன்ல நியூஸ் கேட்டுட்டு அப்படியே கைதவறுதலா ஜெயா டிவி அமுத்திப் போட்டேன்.. அங்கியும் நியூஸ்.. அம்முட்டுதான். இது ரண்டயும் கேட்டுட்டு எவனாவது வெளங்கியிருக்கானா? நீங்களே சொல்லுங்.

இன்னிக்கு சாயங்கலாம் ஒரு அஞ்சு மணிக்காட்டம் அம்மிணிட்ட ஒருவா டீத்தண்ணி குடிக்கலாமின்னுட்டு ஒக்காந்திருந்தேன். நம்முதுதான் நோண்டு கையாச்சே.. ரிமோட்ட எடுத்து (அட டிவி ரிமோட்டுங்)

'அது என்னடா 200 சேனலு, ஒரு ஓட்டு ஓட்டித்தான் பாப்பம்' ன்னு திருப்பிக்கிட்டிருந்தேன். ஒக்காளிங்க.. என்னம்மா பெத்து குட்டிங்களா பெருத்திருக்குங்க ஒவ்வொரு சேனலும்.. எல்லாம் நாம கொடுக்கிற இடந்தா..
அப்படியே ஜெயா மேக்ஸ் பக்கம் போனேன்.. ஒரு பாட்டு போட்டிருந்தான். அதில எப்பயும் பாட்டுதேன்னு அம்மிணி சொன்னுச்சு. அட திருவாத்தாங்களா.. ஒரு சினிமா இப்பிடியும் பார்ட் பார்ட்டா வித்து திங்கறாங்களே.

ம்ம்.. ​சொல்லியாவுது.

அப்ப பாருங்க ஒரு பாட்டு வந்திச்சு.பாட்டுல ஒரு திருட்டுப்பய.. நல்ல இளவட்டம்.. அசல் திருட்டு முழிங்க பயலுக்கு.. திருடறான்.. கொண்டு போயி எங்கியோ ஒளிக்கிறான்.. அப்புறமா ஜெயிலுக்கு போறான்..இது அம்புட்டும் பாட்லய ஓடுது.. நம்ம டயிரக்டருங்க எல்லாம் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரியில்ல.. என்னமா யோசிக்குதுங்க!

பாட்டு நல்லா இருக்கேன்னு சவுண்டு சாஸ்தியா வச்சேன்.
அட நம்ம இளயராசா பாடியிருக்காப்ல..பாட்டும் நல்லாதே இருக்கு.. பாட்டு வரி என்னனு உத்து கேட்டேன்

"அச்சடிச்ச காச அவன் புடிச்சு வச்சாண்டா
அவன் புடிச்சு வச்ச காச நான் அடிச்சுப் போட்டேண்டா"

நல்லாத்தேன் இருக்கு!

அம்மிணி காப்பி கொண்டு வந்துச்சு. என்னடா இவன் டீதான கேட்டான், அம்மிணி காப்பி கொண்டு வருதேன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நீங்க வேணா கேக்கலாம். நா அந்த மாதிரி பன்னாட்டு எல்லாம் பண்ண சான்சே இல்லீங்.

காபிய மூடிட்டு குடிக்காம

"அம்ணி, இந்த பாட்டு சோரா இருக்குல்ல"

"இதா...? ம்"

"இது என்ன படம்னு தெரியுதா அம்ணி?"

மின்ன மாதிரி பளிச்சுன்னு படத்தோட பேரெல்லாம் பாட்டு மேல​ போடறதில்ல.. பாக்கிறவங்களுக்குதா மண்ட காஞ்சு போகுது. அம்மிணி எதுவும் யோசிக்காம வெடுக்குனு சொல்லிச்சு..
"என்னடா பாண்டி என்ன பண்ண போற"

"ங்கொக்கமக்கா, இப்படியொரு படமா.. எளயராசா பாடியிருக்காப்ல. நல்லாயிருக்குல்ல"

"ஆமாமா"

"இவனாரு? ஆடு திருடன கொரவனாட்டம்? ஈரோவா?"

"ஆமா.."

"ஆரு புடிச்சது இப்படி ஒரு ஈரோவ"

"இது எளயராசாவே எடுத்த படம்ல, அவரே பிடிச்சிருப்பாரு"

"அட எளயராசா படமா?"

"ஆமாங்கிறேன்ல"

"ம்ம்.. என்னடா பாண்டி என்ன பண்ணப் போற.. நல்லாத்தேன் இருக்கு பேரு"

"ஆமாஆமா, நீ மொதல்ல காலி டம்பளர கொடு"

காபி டம்ளரை கொடுத்துப் போட்டு நாமதான் இப்படி இளிச்சவாயனாட்டம் எதுவும் தெரியாம இருக்கோம், அம்மிணி பரவால்லே நல்லா சூதானமாத்தா இருக்குன்னு பெருமயா நெனச்சுக்கிட்டேன்.

திரும்ப ஒருமுறை சொல்லிக்கிட்டேன்

"என்னடா பாண்டி என்ன பண்ணப் போற.."

"நீ என்ன சரியான லூஸா?" - அம்மிணிதான்

"....... எலே யாரப்பாத்து என்ன கேக்குற?"

"ஆமா பின்ன.. என்னத்த சொன்னாலும் அப்பிடியே நம்பிக்கிறதா?"

"என்ன புள்ள சொல்ற?"

"ஆங்.. எனக்கு மட்டும் பேரு தெரியவா போவுது.. சொம்மா ஏதொ ஒரு பாட்டு வரிய அடிச்சிவிட்டேன், அத போயி நம்பறதா"

"அப்ப எளயராசா படம்னியே?"

"சும்மனாச்சிக்கு"

"...... கடசில நம்மளயே கேனயனாக்கிட்ட, ஆங்?"

"ஆமா இவுரு பெரிய சீமக்கருவாடு"

ம்ம்.. சொல்லியாவுது!
- ஏனுங் நீங்களாவது சொல்லுங், படத்து பேரு என்னனு.

19 comments:

Anonymous said...

ஏங்க நெசமாலுமே படத்து பேர கேக்கறீங்களா இல்லக்காணும் தமாசு பண்ணுறீங்களா?
படத்து பேரு வால்மீகின்னு சொல்லறாய்ங்க.. இங்கன போனா இந்த பாட்டை பாக்கலாமுங்கோ
லிங்கு கீழ போட்டிருக்கேனுங்க..

http://oruwebsite.com/music_videos/valmiki/ennada-paandi-video_f0662ab3e.html

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கொடிகட்டிப் பற்க்குது தல..,

*இயற்கை ராஜி* said...

:-))))))))))

டவுசர் பாண்டி said...

ஐயோ !! அய்யோ !!! டேய் , காபாலி, நொட்ட, குள்ளா அல்லாரும் இங்க வாங்கடா !!
நம்ப பேட்டைல வந்து நம்ப மேலீயே, கல்லு உடறாங்கோ , சொம்மா, கிறுகிறுன்னு வர்து,

டவுசர் பாண்டி said...

யப்பா !! பதிவ பாத்துட்டு சொம்மா மெர்ஸலு ஆயிட்டேன் கண்ணு. நம்ப கைல யாரு
மாங்கொத்து கட்றது இன்னு , அப்பால பட்சி பாத்தா, மாரியாத்தா சாமி ஆடிக்கீது நைனா !!
உஸ்தாது தாம்பா நீ !!! நம்ப ஏரியா பக்கமா வா நைனா !!

ஷங்கி said...

ஏனுங், நல்லாப் பல்பு வாங்கினீங் போல! ஆனா அதாங் ரங்கமணிக்கு மருவாதி!

Nathanjagk said...

அன்பு பெயரில்லா, விளக்கத்திற்கும், பாட்டு லிங்கிற்கும்​ரொம்ப நன்றிங்க!

பழனிக்கார அண்ணன்,
இயற்கை,
பேட்டை மஸ்தான் (பட்டாம்பூச்சி புடிச்ச) டவுசர் பாண்டி எல்லாருக்கும்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சங்கா,
ண்ணா, இந்த இடுகைக்கு நீங்கள் ​போட்ட தங்கமணி-ரங்கமணி இடுகைகள் ஒரு உற்சாக தூண்டுகோல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சும்மா பிச்சிக்கிச்சு

என்னாமா உட்றிங்க பீலா ...

சூப்பர்

:-))))

Nathanjagk said...

அன்பு Starjan (ஸ்டார்ஜன்),
நன்றி! ஆனா இது பீலா இல்ல! சத்தியங்கோ. உங்களுக்கு ஒரு சாம்பிள் வேணுமின்னா, இதுக்கு முந்தின இடுகை கண்ணுக்கு தெரியாத கற்கள்-ல இருக்கிற ​கடேசி பின்னூட்டத்தப் ​போயி பாருங்க. என்ர அம்மிணி போட்ட பின்னூட்டங்க அது!!

கோவி.கண்ணன் said...

//'அது என்னடா 200 சேனலு, ஒரு ஓட்டு ஓட்டித்தான் பாப்பம்' ன்னு திருப்பிக்கிட்டிருந்தேன். ஒக்காளிங்க.. என்னம்மா பெத்து குட்டிங்களா பெருத்திருக்குங்க ஒவ்வொரு சேனலும்.. எல்லாம் நாம கொடுக்கிற இடந்தா..
அப்படியே ஜெயா மேக்ஸ் பக்கம் போனேன்.. ஒரு பாட்டு போட்டிருந்தான். //
Jetix க்கு சிறுவர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். மற்ற விளையாட்டுக்களை மறந்து சிறுவர்கள் தொலைகாட்சியே கதின்னு இருப்பது வருங்காலத்துக்கு நல்லது அல்ல

சென்ஷி said...

ஹா ஹா ஹா...

யய்யா.. என்னக் கொடும ராசா இது. ஆம்பிளைச்சிங்கமா இருந்துக்கிட்டு இப்படி அப்புராணி சிங்கமா ஆக்ட்டு கொடுக்கறியே..


என்னமோடா பாண்டி என்னன்னமோ பண்றே :))

ஷங்கி said...

ஆகா, நம்ம இடுகைகூட ஆளுங்களை உசுப்பி விடுதா, உற்சாகப்படுத்துதா?! சரி சரி காலரைத் தூக்கி விட்டுக்குவோம்! ஹி ஹி!!

Nathanjagk said...

அன்பு ஜிகே, கருத்துக்கு நன்றி!
//மற்ற விளையாட்டுக்களை மறந்து சிறுவர்கள் தொலைகாட்சியே கதின்னு இருப்பது வருங்காலத்துக்கு நல்லது அல்ல
//
உண்மையே. இப்படியே​போனால் இந்தியாவில் விளையாட்டு ​மைதானங்களை மூக்குக் கண்ணாடிக் க​டைகள் முழுங்கிவிடும்.

அன்பு சென்ஷி,
இதுமாதிரி 1 இல்ல 2 இல்ல ஏகப்பட்ட தடவ ஏமாத்தியிருக்காங்க. ஒருக்கா பாருங்க, வீட்டு டிவிக்கு வர்ர ​​கேபிள் வயர் கட்டாயிடுச்சு. ​டேப் ​போட்டு ஒட்டலாம்னு​போனேன் - ​கேபிளைத்​தொட்டா ஷாக் அடிக்கும்னு சொல்லிடுச்சு அம்மிணி.. நானும் உயிர கையில புடிச்சிக்கிட்டு, ​செருப்ப கால்ல பிடிச்சுக்கிட்டு கவனமா​டேப் சுத்த ஆரம்பிச்சேன். ​கடைசிலே மேல்வீட்டுக்காரம்மா, பக்கத்து வீட்டுக்காரம்மான்னு எல்லாரும் சேந்து சிரிசிரின்னு சிரிச்சு என்ன​கேபிள் ​ஜெகன்னு ஆக்கிட்டாங்க! (இந்த ​பேர ​வெளியில யாரிடமும் ​சொல்லிட ​வேணாம். ப்ளீஸ்ஸ்ஸ்)

Unknown said...

என்னடா பாண்டி ஜெகா உங்க கதையை படித்தேன் என்னதான் இருந்தாலும் பொண்டாட்டி சொன்னா எதவேனாலும் கேக்கிரதா என்ன சொல்லிரது போங்கம்ம்ம்ம்ம் ,,,,எதை குடுத்தாலும் குடிக்கிரதா பாருங்க ஒரு நாலைக்கு காஃபீக்கு பதில பெனாயீலை குடித்துட்டென்னு ஒரு இடுகை போடப்போரீங்க

Nathanjagk said...

Nithya கூறியது...
//எதை குடுத்தாலும் குடிக்கிரதா பாருங்க ஒரு நாலைக்கு காஃபீக்கு பதில பெனாயீலை குடித்துட்டென்னு ஒரு இடுகை போடப்போரீங்க
//
வருகைக்கு நன்றி!
அதுக்கு ​மேல ஒண்ணும் ​சொல்றதா இல்லீங்..

M.Rishan Shareef said...

:))))
கலக்குறீங்க..அருமை !

Karthikeyan G said...

:))))
சூப்பர்!!!!

Nathanjagk said...

அன்பு ரிஷான் ஷெரீப்
அன்பு Karthikeyan G
வாழ்த்துக்கு ​ரொம்ப ​ரொம்ப நன்றி!!

Karthikeyan G said...

//வாழ்த்துக்கு ​ரொம்ப ​ரொம்ப நன்றி!!//

எல்லாத்தையும் கட்டம் கட்டி எழுதறீங்களே.. :-)